இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள இந்த புதிய சட்டங்களால் இந்திய சந்தைகளில் வர்த்தகம் அதிகரிக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்
மேலும் வேளாண் துறையில் கூடுதல் தனியார் முதலீடுகளை இதன் மூலம் ஈர்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல நாடுகள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ,அமெரிக்கா இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளை அரசும் விவசாயிகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சக செ
இந்தக் கருத்தைதான் இந்தியாவின் உச்சநீதிமன்றமும் வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ,அமைதியான போராட்டங்கள் என்பது வெற்றிகரமான ஜனநாயக நாடுகளின் அடையாளம் என கூறியுள்ளார்.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு வெளிநாட்டிலுள்ள முக்கிய பிரபலங்களும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய அரசும் வெளி நாட்டில் உள்ளோர் ,உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை விரும்பவில்லை எனவும் அவர்களுக்கான கண்டனத்தையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.