சூரிய சக்தியில் இயங்கும் இந்த ட்ரோன் இன்ஃபினிட்டி என்று அழைக்கப்படுகிறது .
65 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து பறக்கும் திறனுடன் இவை உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு இந்த அதிநவீன ட்ரோன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனமான நியுஸ்பேஸ் உடன் இணைந்து பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.
எதிரி நாடுகளின் எல்லைக்குள் சென்று அவர்களை கண்காணிக்கும் விதத்தில் இந்த ட்ராேன் உருவாக்கப்படுகிறது.
நேரடியாகவே வீடியோவை வழங்குவதுடன் ரேடார் உள்ளிட்ட சென்சார் கருவிகள் பொறுத்தப்பட்டு இந்த ட்ராேன் தயாரிக்கப்படுகிறது.