பேரறிவாளனின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறிப்பிட்டுள்ளார்.
பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தேன் என ஆளுநர் கூறியுள்ளார்.
இந்நிலையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக தமிழக ஆளுநர் தெரிவித்திருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது
தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு, ஆளுநர் தான் பதில் அளிப்பார் என கூறி வருகிறது .முன்னதாக மத்திய அரசு தமிழக ஆளுநர் தான் முடிவு எடுப்பார் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வரும் இந்த நிலையில் தமிழக ஆளுநர் 7 பேர் விடுதலை தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பார் என தமிழக முதலமைச்சர் கூறிவந்தார்.
இன்று தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவர்தான் 7 பேர் விவகாரத்தில் முடிவெடுக்க முடியும் என ட்விஸ்ட் பண்ணி தகவல் வெளியிட்டிருக்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளுக்காள் காய் நகர்த்தும் இந்த செயலானது தமிழ் உணர்வாளர்களையும் அந்த குடும்ப நபர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது .
தமிழக ஆளுநரின் இந்த பதிலுக்கு தமிழக அரசு என்ன பதில் கூறப் போகிறது ?