January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய வேளாண் சட்டங்களால் இந்திய சந்தைகளில் வர்த்தகம் அதிகரிக்கும் -அமெரிக்க வெளியுறவு அமைச்சு

இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களால் இந்திய சந்தைகளில் வர்த்தகம் அதிகரிக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் வேளாண் துறையில் கூடுதல் தனியார் முதலீடுகளை இதன் மூலம் ஈர்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள நெட் பிரைஸ், அமைதியான போராட்டங்கள் என்பது வெற்றிகரமான ஜனநாயக நாடுகளின் அடையாளம் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, வேளாண் சட்டங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளை அரசும் விவசாயிகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையே இந்திய உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு வெளிநாட்டிலுள்ள முக்கிய பிரபலங்களும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அமெரிக்கா இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

எனினும் இந்திய அரசு வெளி நாடுகள், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை விரும்பவில்லை என தெரிவித்து தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.