April 29, 2025 20:04:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்ணைக் கவரும் சாகசங்களுடன் இடம்பெறும் ஏரோ இந்தியா விமான கண்காட்சி!

பெங்களூரில் 13ஆவது ஆண்டாக,  ஏரோ இந்தியா விமான கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி.ஆர்.டி.ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு இந்த விமான கண்காட்சியை நடத்துகிறது.

3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியின் இரண்டாவது நாளான இன்று  விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வானத்தில் வட்டமிட்டு சாகசங்களை நிகழ்த்தின.

இந்த ஏரோ இந்தியா விமான கண்காட்சியை பெங்களூர் ஏலகங்கா விமானப்படை தளத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார்.

இந்தியா தன்னிடம் உள்ள வான்வழி பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் நவீன போர் விமானங்கள் என அனைத்தையும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது.

அத்துடன் ஏரோஸ்பேஸ் மற்றும் வான்வழிப் பாதுகாப்பு தொழில் துறையினர் தங்களது படைப்புகளையும் காட்சிப்படுத்தி உள்ளனர்.

ஏரோ இந்தியா கண்காட்சியில் பன்முகத்தன்மை படைத்த மிகவும் சிறிய மற்றும் எடை குறைந்த சூப்பர் சோனிக் தேஜஸ் இலகு ரக போர் விமானங்களும், வேறு பல விதமான போர் விமானங்களும் இடம்பெற்றுள்ளன.

சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவு படுத்த இந்த கண்காட்சி உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

This slideshow requires JavaScript.