January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில்; கொரோனா தொற்று என தகவல்!

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும் நடிகருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் அவரது குடும்பத்தாரிடமிருந்தோ மருத்துவமனையிடமிருந்தோ அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

68 வயதான விஜயகாந்த் வேறு சுகவீனங்களுக்காக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வருகின்றார்.

இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் அவரது கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.