இந்திய தலைநகர் புதுடில்லியில் வசிக்கும் 20 மில்லியன் மக்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
அரசாங்கம் மேற்கொண்ட ஆய்வொன்றின் போது இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
28,000 பேரை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
புதுடில்லியில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்திய தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 53 வீதமானவர்களின் உடல்களில் கொரோனா நோய் எதிர்ப்பாற்றல் உருவாகியிருப்பதாக ஆய்வினை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 700,000 பேரை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வில் 53 வீதமானவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.