சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா ஞாயிற்றுக்கிழமை(31) வீடு திரும்புவார் என விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து கடந்த 27 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட சசிகலா உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் சசிகலா ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வீடு திரும்புவார் என பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால் சசிகலா ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சசிகலாவிற்கு அதிமுகவில் இடம் இருக்கா இல்லையா என பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
சசிகலா அதிமுகவில் அங்கம் வகிப்பார் என அரசியல் விமர்சகர்கள் பலரும் நேர்மறையான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இருந்த போதிலும் ஒரு சிலர் சசிகலாவிற்கு இடமில்லை என பகிரங்கமாக கூறியுள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் சசிகலா விடுதலையாகியுள்ள நிலையில், இது அதிமுகவிற்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும், எதிர்நோக்க வேண்டிய சவால்கள் அதிகம் என கருதப்படுகிறது.
தமிழக அரசியலில் மறக்க முடியாக நிகழ்வு தான் கூவத்தூர் விடுதியில் சசிகலா தலைமையில் அதிமுக அமைச்சர்கள் முக்கிய தீர்மானங்களை எடுத்ததும் ஒளிந்து விளையாடியதும்.
விடுதலையாகி வரும் சசிகலாவின் அடுத்த அதிரடி என்னவென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.