February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கங்குலி தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் முன்னாள் அணித் தலைவருமான கங்குலியின் உடல் நிலை தேரியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்குலி ஜனவரி 2 ஆம் திகதி மாரடைப்பு காரணமாகக் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 இதய தமணிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.
ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை நடாத்தப்பட்டு இதய தமணி ஒன்றில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கங்குலி வீடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் 2 ஆம் முறையாக நெஞ்சுவலி ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி , மீண்டும் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தற்பொழுது கங்குலியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த கங்குலி தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.