இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த அழுத்த குண்டு வெடிப்பு சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 4 கார்கள் சேதமடைந்துள்ளதாகவும் உயிர்ச்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை எனவும் டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
டெல்லி அப்துல்கலாம் சாலையில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் இந்த குறைந்த சக்திகொண்ட குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரான காபி அஷ்கெனாசியுடன் உரையாடியுள்ளதாக தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ” நாங்கள் இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். தூதரகம் மற்றும் இஸ்ரேலிய தூதர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பதாக”அவருக்கு உறுதியளித்துள்ளார்.
Spoke just now to Israeli FM @Gabi_Ashkenazi about the explosion outside the Israeli Embassy. We take this very seriously. Assured him of the fullest protection for the Embassy and Israeli diplomats. Matter is under investigation and no effort will be spared to find the culprits.
— Dr. S. Jaishankar (Modi Ka Parivar) (@DrSJaishankar) January 29, 2021