April 29, 2025 21:24:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய- சீன எல்லை மோதல்: 20 சீன வீரர்களுக்கு பலத்த காயம்

(Photo:sikkim/wikipedia)

இந்தியாவின் சிக்கிம் மாநிலம் நகுலாப் பகுதியில் உள்ள சீன எல்லையில் இந்திய- சீன படையினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருதரப்பை சேர்ந்த 24 வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய – சீன எல்லையான லடாக் பகுதியில் ஏற்கனவே பதற்றம் நிலவி வருகின்ற நிலையில் இருதரப்பு இராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் சிக்கிம் எல்லைப் பகுதியில் சீன இராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய பகுதிக்குள்  ஊடுருவ முயன்றதாக தெரியவருகிறது.

இதையறிந்த இந்திய இராணுவம் சீன வீரர்களை எச்சரித்ததுடன் இரு தரப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 20 சீன வீரர்களும் 4 இந்திய வீரர்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இந்திய, சீனா நாடுகளிடையே 9ஆவது சுற்று பேச்சுவார்த்தை நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 15 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், எல்லையில் படைகளைத் திரும்ப பெறுவது, பதற்றத்தை எற்படுத்தும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பது, எல்லையில் அமைதியை நிலைநாட்டுதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீன வீரர்களின் இந்த ஊடுருவல் முயற்சியின் மூலம் சிக்கிம் எல்லைப்பகுதியில் புதிய பிரச்சனை உருவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.