July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய குடியரசு தின விழாவில் முதல் முறையாக ரஃபேல் விமானங்கள்

இந்திய குடியரசு தின விழா எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதனால் டெல்லியில் பலத்த ஏற்பாடுகளும் பாதுகாப்புகளும் செய்யப்பட்டுள்ளன.

இம்முறை முதல் முறையாக குடியரசு தின சாகச நிகழ்ச்சியில் ரஃபேல் போர் விமானங்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது .

குடியரசு தின விழாவில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியில் இந்த விமானம் இடம்பெற உள்ளதாக மேஜர் ஜெனரல் அலோக் கேகர் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக வெர்ட்டிகல் சார்லி எனப்படும் இந்த சாகச நிகழ்ச்சியில் முதல்முறையாக ரஃபேல் விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

விமானங்களின் வானவேடிக்கை நிகழ்ச்சியும் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ள மேஜர் ஜெனரல், இம்முறை பார்வையாளர்கள் குறைக்கப்பட்டு ,அணிவகுப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

மேலும் குடியரசு தின விழாவில் நவீன ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 26 ஆம் திகதி நடைபெறும் அணிவகுப்பில் பீஷ்மா பீரங்கிகள் ,பிரமோஸ் ஏவுகணைகள் ,பினாகா ஏவுகணை அமைப்பு , டி 90 ரக பீரங்கிகள்,வான் பாதுகாப்பு ஆயுதம்,மின் அணு போர் ஆயுதமான சம்விஜய் உள்ளிட்டவை இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

ஆகவே தமது பலத்தை நிரூபிக்கும் வகையில், இம்முறை இந்தியா கொள்வனவு செய்த மற்றும் உற்பத்தி செய்த புதிய ஆயுதங்கள் போர்க் கருவிகளை காட்சிப்படுத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.