பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு உறுதியாக உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை சிறையில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலில் அறிவித்தது தமிழக அரசு தான் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது அதிமுக அரசுதான் என ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான்.
— O Panneerselvam (@OfficeOfOPS) January 23, 2021
7 பேர் விடுதலையில் நல்ல தீர்வு விரைவில் வரும் என எதிர்பார்ப்பதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார் .
தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு இதுதான் என்பதையும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.