தமிழகத்தில் தேர்தல் வர இருப்பதை அடுத்து ஆளும் கட்சியான அதிமுகவிற்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதைத்தொடர்ந்து இரண்டு கட்சித் தலைவர்களும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை சுமத்திவருகிறார்கள்.
இந்த நிலையில், சுமார் 2855 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை காரணம் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுகையில்,ஆட்சி முடியும் தருவாயில் இத்தகைய டெண்டர் விடுவதற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் இப்படி அவசர கதியில் விடப்பட்ட 2855 கோடி மதிப்புடைய டெண்டரை ரத்து செய்வோம் என்று சவால் விடுத்துள்ளார்.
இந்த டெண்டர் ரத்து செய்யப்படுமா அல்லது தொடருமா என்பதை திமுக வெற்றிபெறுமா? அதிமுக வெற்றிபெறுமா? என்பதைப் பொறுத்தே அமையும்.