தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஸ்மார்ட் வெடி குண்டை பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் ஹாக் ஐ என்ற விமானத்தில் இருந்து வெற்றிகரமாக இயக்கி பரிசோதனை செய்துள்ளது.
சுமார் 120 கிலோ எடையுள்ள இந்த குண்டு மூலம் 100 கிலோமீட்டர் வரை உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கலாம் என கூறப்படுகிறது.ஆனால் இதில் விமானிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறப்படுகிறது.
எதிரிகளின் இருப்பிடங்கள்,பதுங்கு குழிகள்,விமானப்படைத் தளங்கள் உள்ளிட்டவற்றை இதனால் அழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா கடற்கரையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஒரு சிறிய விமானத்திலிருந்து வெடிகுண்டை பரிசோதித்துள்ளனர்.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டிஆர்டிஓ தயாரித்த ஸ்மார்ட் அண்டி ஏர்பீல்ட் வெப்பன் என்றழைக்கப்படும் வெடிகுண்டு வெடிக்க வைத்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.