February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சசிகலாவுக்கு தொடர்ந்தும் சிகிச்சை

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை ஐசியூவில் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்க்கரை நோய் ,ரத்த அழுத்தம், தைராய்ட் பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

ஏற்கனவே சசிகலாவுக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்திருக்கிறது.

இந்நிலையில் அவரின் ரத்தத்தில் ஒக்சிஜன் அளவு குறைவாக உள்ளதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சசிகலா எதிர்வரும் 27ஆம் திகதி விடுதலையாக உள்ள நிலையில், அவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் இருந்ததாக அவரது தம்பி திவாகரன் கூறியுள்ளார்.