
இந்தியாவில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளின் போது பிரதமர் மோடிக்கு பெரும்பாலான முதலமைச்சர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 16ஆம் திகதி முதல், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் ஐம்பது வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
பிரதமரும் பெரும்பாலான முதலமைச்சர்களும் 50 வயது க்கு மேற்பட்டவர்கள் என்பதால் இவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை.
இதேவேளை, 2 ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் போது சுமார் 27 கோடி குடிமக்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.