April 30, 2025 14:04:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெயலலிதா மரணத்தின் மர்மம்; ஆர்வம் காட்டாத ஓபிஎஸ்

தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதில் ஒரு கட்டமாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தேனி மாவட்டம் போடியில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தினார். அப்பாேது பேசிய அவர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை அறிந்துகொள்ள ஓ. பன்னீர்செல்வம் தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

போடி தொகுதியானது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ்சின் தொகுதியாகும். இங்கு இரட்டை இலைக்கும், எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் தீவிரமான தொண்டர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை கருத்தில் கொண்டே, ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மத்தை தெரிந்துகொள்ள ஓபிஎஸ் முயற்சி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். இதற்கு ஓபிஎஸ் எப்படி எதிர்வினையாற்ற போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.