பெங்களூர் பரப்பன் அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையொன்றுக்கு சிகிச்சைக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் சிறையில் அவருக்கு திடீர் மூச்சுத்திணறலால் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மருத்துவர்கள் சிறைச்சாலைக்கு விரைந்து, சிகிச்சை அளித்துள்ளதாகவும், சசிகலாவுக்கு சாதாரண சுவாச கோளாறே ஏற்பட்டுள்ளதாகவும் அக்ரஹார சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அவரை பெங்களூர் பவுரிங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிகிச்சைகளுக்குப் பின்னர் சசிகலா தற்போது நலமுடன் இருப்பதாகவும் சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 27 ஆம் திகதி சசிகலா விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வாறு அவருக்கு அவசர சுகயீனம் ஏற்பட்டுள்ளது.