எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு கருவியை இயக்குவது எப்படி என பயிற்சி எடுப்பதற்காக இந்திய ராணுவ வீரர்கள் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து 5 எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு கருவிகளை இந்தியா வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.இதனால் இந்த ஏவுகணை கருவியை எவ்வாறு இயக்குவது மற்றும் பராமரிப்பது குறித்து பயிற்சி பெறுவதற்காக இந்திய ராணுவத்தில் இருந்து சுமார் 100 பேர் அடங்கிய குழு இம்மாதம் ரஷ்யாவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஏவுகணை பாதுகாப்பு கருவியை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் இந்தியா அதை பொருட்படுத்தாது இந்த கருவிகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவிடம் முதல்கட்ட கருவியை ரஷ்யா வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.