
பெங்களூர் சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா விடுதலையானாலும் அவர் அதிமுகவுடன் இணைய வாய்ப்பில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் அவர் இணைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் சசிகலா என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தேன். அழைப்பை ஏற்றுக் கொண்டு தமிழகம் வருவதாக பிரதமர் தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.