இந்தியாவில் முதல் கட்டமாகச் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொவேக்சின் தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதன் காரணமாக பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இவ் அறிவிப்பில் காய்ச்சல், உடல் தளர்வு, ஒவ்வாமை, இரத்த கசிவு போன்ற உடல் நலம் பாதிப்பு உள்ளவர்கள் இந்த கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் கர்ப்பிணிப் பெண்களும் இந்த கொவேக்சின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளக்கூடாது என பாரத் பயோடெக் நிறுவனம் இவ் அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் தீவிர நோய் பாதிப்புகள் உடையவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் கொவேக்சின் கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, கொவேக்சின் கொவேக்சின் மருந்தைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பு மருந்து குறித்த முழு விபரங்களை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.