சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதோடு, அவுஸ்திரேலியா ஒரு போட்டியிலும், ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றியும் முடிவடைந்துள்ளது.
உலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 430 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
420 புள்ளிகளுடன் நியுசிலாந்து இரண்டாவது இடத்திற்கும், 332 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 36 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இந்திய அணி, இந்தத் தொடரை வெற்றிகொண்டுள்ளமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.