பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்துகளை அண்டை நாடுகளுக்கும் அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.
முதலில் நல்லெண்ண அடிப்படையில் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகள் அந்நாடுகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வாரங்களில் அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல் கட்டமாக நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்படும் தடுப்பூசி, பின்னர் தேவைக்கேற்ப விலைக்கு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட்,பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்துகளை அவசர தேவைக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு தற்போது தடுப்பூசி போடுவது நடைபெற்றுவருகிறது.
வரும் வாரங்களில் இலங்கை ,ஆப்கானிஸ்தான், மாலை தீவு,மொரிஷியஸ், பூடான், நேபாளம்,வங்கதேசம்,மியன்மார் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய உள்ளது இந்தியா.
ஏற்கனவே பிரேசில்,மியன்மார் ஆகிய நாடுகள் தடுப்பு மருந்துகளை வாங்க இந்திய நிறுவனங்களுடன் உடன்பாடு செய்துள்ளன.