November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய ரக போர் விமானங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் இந்தியா

இந்தியா தற்போது போர் தளவாடங்களையும் போர்க் கருவிகளையும் ஆயுதங்களையும் கொள்வனவு செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது.

மேலும் போர் விமானங்களையும் போர்க் கருவிகளையும் உள்நாட்டில் உற்பத்தி செய்யவும் இந்தியா முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் போர்க் கருவிகளையும் ஆயுதங்களையும் இந்தியா வாங்கி குவித்து வருவது ஒரு பக்கம் எதிரி நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 33 புதிய ரக போர் விமானங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்திய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

நவீன வசதிகளுடன் வாங்கப்படும் இந்த புதிய மிக்-29 ரக போர் விமானங்களுடன் மேலும் 59 விமானங்களை நவீனப்படுத்த 7,418 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

29 ரக போர் விமானங்கள் 21ம் சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானங்கள் பன்னிரெண்டும் ரஷ்யாவிடமிருந்து புதிதாக வாங்க இந்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்திய விமானப் படையிடம் ஏற்கனவே 59 மிக்-29 ரக போர் விமானங்கள் உள்ள நிலையில்,மேலும் 21 விமானங்களை குறைவான விலைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படை வசம் உள்ள நிலையில்,புதிதாக 12 விமானங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை 10 ஆயிரத்து 730 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட உள்ளன .

இந்தியா போர் கருவிகள், ஆயுதங்களுக்கு பெரிய அளவிலான நிதி ஒதுக்கி பாரியளவில் கொள்வனவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.