July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய எல்லையில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவிப்பு

Photo:NDTV

இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா கிராமமொன்றை உருவாக்கியுள்ளமை செய்மதி படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக என்டிரீவி செய்தி வெளியிட்டுள்ளது.

101 வீடுகளை கொண்ட புதிய கிராமமொன்றை சீனா உருவாக்கியுள்ளது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லைக்குள் 4.5 கிலோமீற்றர் பகுதியில் சீனா இந்த கிராமத்தை உருவாக்கியுள்ளமை இந்தியாவிற்கு நிச்சயமாக கவலையளிக்ககூடிய விடயம் என பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் முதலாம் திகதி எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் மூலம் இந்த கிராமம் உருவாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
2019 ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட படத்தில் குறிப்பிட்ட கிராமம் காணப்படவில்லை.

இதேவேளை இந்த படங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு இந்திய எல்லையில் சீனா கிராமங்களை உருவாக்குவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த பல வருடங்களாக சீனா இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.