தமிழ்நாடு மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இன்று ஆரம்பமானது.
விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தைப்பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் போட்டிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகளும் 650 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
முனியாண்டி கோவில் காளைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி, கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தனர்.