இராணுவ தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் ராணுவத்தின் ஆளில்லா குட்டி ட்ராேன் விமானங்கள் அணிவகுத்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
தூரத்தில் இருந்து பார்க்கும் போது தேனீக்கள் கூட்டமாக பறந்து வருவதைப் போல் அவை காட்சியளித்தன.
எதிரியின் எல்லைக்குள் ஆளின்றி 50 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று இந்த ட்ராேன்களால் தாக்க முடியும் எனக் கூறப்படுகிறது .
இவற்றை இயக்கும் வீரர்கள் பாதுகாப்பான இடங்களில் இருந்தபடியே எதிரிகளை கண்காணிக்கவும் முடிகிறது .
விண்ணில் பறந்தபடியே எதிரியின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட இந்த குட்டி ட்ராேன் விமானங்கள் 50 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் பெற்றவையாகும்.
அதேநேரத்தில் எதிரிகளின் வான் மற்றும் தரையில் உள்ள இலக்குகளையும் இந்த விமானங்கள் மூலம் அழிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
இந்திய ராணுவத்திடம் இப்படி ஒரு குட்டி ட்ராேன் விமானப் படை உள்ளது என்பது முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.