
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு தனது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை விநியோகிக்கும் நடவடிக்கைகளை இந்தியா ஆரம்பிக்கவுள்ளது.
உலக நாடுகளிற்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்குவது என தீர்மானித்துள்ள இந்தியா தனது அயல்நாடுகளுக்கு 20 மில்லியன் டோஸ் மருந்துகளை வழங்கவுள்ளதாக புளும்பேர்க் தெரிவித்துள்ளது.
சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடமிருந்து மருந்தினை கொள்வனவு செய்யவுள்ள இந்திய அரசாங்க நிறுவனம் அந்த மருந்துகளை இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு வழங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் இன்னும் பரிசீலனை செய்துவருவதாகவும் சில நாடுகளிற்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் தொகுதி மருந்துகள் அடுத்த சில வாரங்களில் விநியோகிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னாசியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதற்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்துவது குறித்து இந்திய பிரதமர் ஆர்வமாக உள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை அனுப்புவதை துரிதப்படுத்துவதற்கு இணங்கியதை தொடர்ந்து பிரேசில் இந்தியாவிற்கு விமானமொன்றையும் அனுப்பவுள்ளது.