இந்தியாவில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்ட சிறந்த வீரர்களுக்கு அரச பணிகளில் முன்னுரிமை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று கொரோனா விதிமுறைகளுடன் கூடிய ஜல்லிக்கட்டுப் போட்டியினை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.
தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றது.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரச பணிகளில் முன்னுரிமை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் இது குறித்த முடிவை முதலமைச்சர் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டாலும், அவர்களுக்கு அரச பணி வழங்கப்பட வேண்டும் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.