July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மதுரையில் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

தைப்பொங்கல் அன்று தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மதுரை வடபழஞ்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டதுடன்,அங்கு கலந்து கொண்ட பொதுமக்களுடன் வரிசையில் அமர்ந்து உணவருந்தினார்.

மதுரை விமான நிலையத்தில் பேசிய ராகுல்காந்தி தமிழ் கலாசாரம் இந்தியாவின் ஆன்மாவை போன்றது என புகழ்ந்துள்ளார். அதனை யாராலும் அழிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு பாேட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என் பதை தான் நேரில் கண்டு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு பாேட்டியை பார்வையிட்ட ராகுல்காந்தி, தமிழ் மக்களின் கலாசாரம்,பாரம்பரியம் போன்றவற்றை தெரிந்து கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டை தமிழக மக்கள் பெருமையாக கருதுவதற்கான காரணத்தை தெரிந்து கொண்டதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி திடீரென விஜயம் செய்திருப்பது சக கட்சிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா பாதிப்பிற்கு பிறகு,தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டை பார்வையிட ராகுல்காந்தி வந்திருப்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

இந்த வருகையும் தேர்தலுக்கான அரசியல் வியூகங்களில் ஒன்று தான் எனவும் கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டுப் போட்டி மிகுந்த பாதுகாப்புடன் நடத்தப்படுவதாக ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் மொழியைச் சிதைக்க மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருக்கிறார் .

விவசாயிகளை அழிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் மத்திய அரசு செயல்படுவதாகவும் அவர்களை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு எதிராக சதி செய்வதாகவும் ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.

மத்திய அரசுக்கு வேண்டப்பட்ட நால்வருக்காக இந்த வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி விவசாயிகளின் நிலத்தையும் உற்பத்தியையும் எடுத்து அவர்களி்ன நண்பர்கள் சிலருக்கு கொடுக்க முனைந்துள்ளதாக கடுமையாக சாடியுள்ளார்.

விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு.விவசாயிகள் எப்போதெல்லாம் பலவீனமானார்களோ அப்போது நாடும் பலவீனமாகியது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.என தைப்பொங்கல் அன்று தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.

This slideshow requires JavaScript.