
48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 83 இலகுரக தேஜஸ் போர் விமானங்களை வாங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இவை முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தான் இந்த தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்கின்றது.
இந்த 83 இலகுரக தேஜஸ் போர் விமானங்களும் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய விமானப்படைக்காக வாங்க உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் .
இதில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட 83 தேஜஸ் மார்க் 1ஏ இலகுரக போர் விமானங்களை இந்திய விமானப்படை கொள்வனவு செய்யவுள்ளது.