January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“மாஸ்டர்” வெளியீடு: திருவிழா களம் கண்ட திரையரங்குகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளில் குவிந்த விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க ஆட்டம்பாட்டத்தோடு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பல நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மாஸ்டர் திரைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

வழமையான நான்கு காட்சிகள் என்று இருந்த நிலையில், ஆறிலிருந்து ஏழு காட்சிகள் வரை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தைக் காண குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வந்திருந்து திரையரங்கில் படத்தை கண்டு ரசித்ததுடன் படம் திரையிட்ட திரையரங்குகள் எல்லாம் திருவிழாக் கோலம் பூண்டு குதூகலமும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக மாஸ் காட்சிகளுடன் படம் இருப்பதால் ரசிகர்களும் முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடி வருவதுடன் ஓராண்டு இடைவெளிக்கு பின் விஜய் படம் வெளியாவதால் ரசிகர்கள் மாஸ்டரை கொண்டாடுகின்றனர்.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், 50 சதவீத இருக்கைகளுடன், அண்மைக் காலமாக திரையரங்குகள் செயல்பட்டு வந்தன.

இதேவேளை இலங்கையிலும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளதுடன் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் முதல் காட்சிகளை காண திரையரங்குகளுக்கு குவிந்தனர்.

சுகாதார விதிமுறைகளுடன் ரசிகர்கள் திரைப்படத்தை காண வருகைத்தந்தமையும் குறிப்பிடத்தக்கது.