January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிங்கங்களை மிரள வைத்த நாயின் வீரச்செயல் – வைரலாகும் காணொளி!

இந்தியாவின் வனப்பகுதியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அவற்றை பின்வாங்க வைத்த நாயின் செயல் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஜீப் ஒன்றிற்கு அருகே இரண்டு சிங்கங்கள் வந்துள்ளன.

இதன் போது அங்கு நின்ற நாய் ஒன்று குறைத்து சத்தம் எழுப்பி சிங்கங்களை பயம் கொள்ளச் செய்ததுடன் சிங்கம் ஒன்றுடன் சண்டையிட்டுள்ளது.

இதனால் பயந்த சிங்கம் பின்வாங்குவதைக் காணொளியில் காண முடிகின்றது.

சிங்கங்களை கண்டு அஞ்சி ஓடாது அதை எதிர்த்து சண்டையிடும் நாயின் துணிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்த காணொளியை இந்திய வனத் துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதன் மூலம் நாயின் வீரச் செயல் வைரலாகி வருகின்றது.

“வாழ்க்கையிலும் இந்த அளவுக்கு நம்பிக்கை தேவை” என்று பதிவிட்டு அவர் இக் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.