January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விராட் கோஹ்லி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு பெண் குழந்தை

இந்திய கிரிகெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி – பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது.

இது தொடர்பாக விராட் கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தாம் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதன் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

 

விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இந்நிலையில், அனுஷ்கா கர்ப்பமாக இருக்கிறார் என்கிற செய்தியைக் கடந்த ஆண்டு கொரோனா முடக்கநிலையின் போது அறிவித்தனர்.

கர்ப காலத்தில் கணவர் தன்னை முழுமையாக கவனித்துக்கொண்டதாக அனுஷ்கா சர்மா ஒரு நேர்காணலின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.