May 29, 2025 23:57:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மனித குலத்தை காப்பாற்ற இந்தியா தயாராக உள்ளது’

இரண்டு கொரோனா தடுப்பூசிகள் மூலம் உலக மக்களை காப்பாற்ற இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

16வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை காணொளி வாயிலாக தொடங்கி வைத்து பேசும்போதே பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து இணையம் வாயிலாக இணைந்துள்ளதாகவும் ஆனால் மனம் எப்போதும் பாரத மாதா உடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பயங்கரவாதத்தை எதிர்கொண்டது போல் உலகமும் இந்த சவாலை எதிர்கொள்ள தைரியம் பெற்றுள்ளதாக அவர் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பேசியுள்ளார்.

முகக்கவசங்கள்,வென்டிலேட்டர்கள்,பிபி கருவிகளை இந்தியா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த நிலை மாறி தற்போது இந்தியா இவற்றின் தயாரிப்பில் தன்னிறைவு அடைந்துள்ளது.

இன்று இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு கொராேனா தடுப்பூசிகளால் மனித குலத்தையே காப்பாற்ற தயாராக உள்ளது.

இந்தியா உடைந்துவிடும் என்றும் ஜனநாயகம் என்பது நாட்டில் சாத்தியமற்றது என்றும் சிலர் கேலி செய்தனர். ஆனால் இன்று அவற்றை உடைத்து இந்தியா ஒரு வலுவான,துடிப்பான ஜனநாயக நாடாக திகழ்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.