அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான ஸ்டீவன் ஸ்மித் 16 மாதங்களின் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் சதமடித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே அவர் இவ்வாறு சதமடித்துள்ளார்.
இது 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பெற்ற சதத்துக்கு பின்னர், அவர் பெற்ற முதல் சதமாகும்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 226 பந்துகுளை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித் 131 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
கடந்த 16 மாதங்களில் அவர் 14 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளதுடன் 4 அரைச்சதங்களைப் பெற்றுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் மொத்தமாக 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த ஸ்மித் மூன்றாவது போட்டியில் சதமடித்துள்ளார்.
இது அவுஸ்திரேலிய அணிக்காக ஸ்டீவன் ஸ்மித்தின் 27 ஆவது டெஸ்ட் சதம் என்பதோடு, 226 பந்துகளை எதிர்கொண்ட அவர் 16 பௌண்டரிகளுடன் 131 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
சிட்னி மைதானம் தன்னுடைய சொந்த மைதானம் என்றும் இங்கு விளையாடுவது மிகவும் பிடித்த விடயம் என்றும், அதனாலேயே சதத்தை எட்ட முடிந்தது எனவும் ஸ்டீவன் ஸ்மித் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.