இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில், ரஜோரியில் உள்ள இந்திய-பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியில் ட்ரோன்கள் மூலம் பாக்கிஸ்தான் ஆயுதங்களை பயங்கரவாதிகளுக்கு விநியோகிப்பதாக அந்நாட்டு காவல்துறை குற்றம் சாட்டுகின்றது.
அந்த ஆயுதங்களை எடுத்துச்செல்ல முயன்ற லக்சர் இ- தொய்பா அமைப்பின் 3 பயங்கரவாதிகளை இந்திய பணத்துடன் கைதுசெய்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைமை அதிகாரி டில்பாக் சிங் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான் ஆயுதங்களையும் போதைப் பொருட்களையும் வழங்குவதற்காக இவ்வகையான ஆளில்லா ட்ரோன் விமானங்களை பயன்படுத்துவதாக அவர் கூறினார். இவ்வாறான ட்ரோன் நடவடிக்கைகளை முறியடித்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.