November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டன் – இந்தியா இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான விமான போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆர்பிக்கப்பட்டுள்ளன.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்று பரவலால் காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் பிரிட்டனுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தின.

இதனையடுத்து இந்திய அரசு, கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து சேவையை இடைநிறுத்தியது.

இந்நிலையில் இன்று முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் பயணிகள் ஒவ்வொருவரும் கட்டணம் செலுத்தப்பட்ட கட்டாய கொரோனா அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரிட்டனிலிருந்து இந்தியா வர அனுமதிக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் 246 பயணிகள் டில்லி வந்துள்ளதுடன் மும்பையிலிருந்து மற்றொரு விமானம் புதன்கிழமை மாலை பிரிட்டனுக்கு பயணித்துள்ளது.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையே வரத்துக்கு 30 விமானச்சேவைகள் மட்டும் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளும் கடந்த 14 நாட்களில் தாம் பயணித்த இடங்கள் தொடர்பான விபரங்களை அறிவிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் இந்தியாவில், உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் 2 அல்லது 3 மாதங்களாகும் என்று  மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் செயலாளர் பி.எஸ்.கரோலா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.