January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இணையதளங்களில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை வெளியிட தடை!

நடிகர் விஜய் நடித்து வெளிவரவுள்ள மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்துள்ள ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித் குமார் படத்தை சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் 9 மாதங்கள் கடந்து வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படம் இணையத்தளத்தில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும் என தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டியது.

இதனையடுத்து சட்டவிரோத 400இணையதளங்களிலும் 9 கேபிள் தொலைக்காட்சிகளிலும் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடைவிதித்து  நீதிமன்றம் உத்தரவிட்டது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியீட்டுக்கு தயாராக இருந்தது.

எனினும் கொரோனா பாதிப்பு நிலைமையினால் படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்து. இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13ஆம் திகதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.