July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஊழலை பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயார்’ – முதலமைச்சருக்கு ஸ்டாலின் பதிலடி

ஊழலை பற்றி நேருக்கு நேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் விவாதிக்க தான் தயாராக இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் தேர்தல் பரப்புரையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஊழல் பற்றி விவாதிக்க தயாரா என முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்திருந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசில் செய்யப்பட்ட ஊழல்கள் என முதலமைச்சரின் குடும்பம் தொடர்புபட்ட ஊழல்கள் என அனைத்தையுமே அவர் பட்டியலிட்டு குறிப்பிட்டு விமர்சித்திருக்கிறார்.

அதில் இந்தியாவிலேயே ஊழலுக்காக சிறைக்குப் போன முதலமைச்சரை கொண்ட கட்சி ,ஊழலுக்காக முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, என்றும் மாறாக ஊழல் கறைபடிந்த கட்சி அதிமுக தான் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன் தற்போது அந்த கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருக்கும் பழனிச்சாமியும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் தான் என்றும் , இதுபற்றி எந்த கூச்சமும் இல்லாமல் நான் ஊழல் செய்யவில்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பதாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் கொல்லைப்புறமாக வந்த பழனிச்சாமிக்கு ஒரு முதலமைச்சர் பதவிக்குரிய நாகரீகம் கூடத் தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியதிலிருந்து, ரேஷன் அரிசி ஊழல், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை ,மின்சாரத் துறை, நிலக்கரி இறக்குமதியில் ஊழல் ,மருந்து கொள்வனவில் ஊழல், உர ஊழல் என பல திட்டங்களில் ஊழல் செய்ததாக வரிசைப்படுத்தி அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா? என்று முதலமைச்சர் பழனிசாமி நேற்று சவால் – சவடால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்.

அதற்கு முன்னர் பழனிச்சாமி சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். நாளைக்கே உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து- ‘ சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள்.

நான் வழக்கை சந்திக்கத் தயார்’ என்று பழனிசாமி உத்தரவு வாங்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார் ஸ்டாலின்.