July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயிகள் – மத்திய அரசு பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை: இந்திய உச்ச நீதிமன்றம் அதிருப்தி

(Photo: SUPREME COURT OF INDIA/Facebook)

மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் முன்னெடுத்துவரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பில் இதுவரை நிரந்தர தீர்வொன்றை காணமுடியாதமைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிரான மனுவை ஆராய்ந்தபோதே உச்சநீதிமன்றம் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

விசாயிகளின் பேராட்டத்திற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாதது குறித்து வருத்தமளிப்பதாகவும் மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதே தனது நோக்கம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் போராட்டம் தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை தற்போது காணப்படும் நிலவரத்தை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம், பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கின்றோம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நீதிமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ள சட்டமா அதிபர் கே.கே வேணுகோபால், ‘நாங்கள் விவசாயிகளுடன் 8ஆம் திகதி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

இருதரப்பிற்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி விவசாயிகளின் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படுமென நீதிபதிகள் தெரிவித்தனர்.

விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இடையே நடைபெற்ற ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை எந்தவித முன்னேற்றமும் இன்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.