November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயிகள் போராட்டம்: 16 மணிநேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழப்பு

File Photo

இந்திய மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

‘டெல்லி போராட்டத்தில் 16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழக்கிறார், இதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்’ என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயித் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய வேளாண் சட்டங்கள் இரத்துச்செய்யப்படுவதைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் விவசாயிகள் பரிசீலனை செய்யமாட்டார்கள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, விவசாயிகளின் போராட்டம் தொடர்பில்  அமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசு பிரதிநிதிகளுடன், சுமார் 41 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் 40 ஆவது நாளாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குளிர் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டக் களங்களில் முகாமிட்டுள்ளதால் வயதான விவசாயிகளின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.