இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் விஜயமொன்றை மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் , எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இலங்கையில் பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரியாக இவர் கருதப்படுகின்றார்.
இரு நாடுகளிலும் கொவிட்- 19 பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்களையும் வெளிவிகார அமைச்சர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇱🇰🇮🇳 #Indian External Affairs Minister Dr. S.Jaishankar undertakes his first foreign visit to #SriLanka from 05 – 07 January 2021.
Full Media Release at: https://t.co/G8aBlayM22#India #lka #DiplomacyLk@DrSJaishankar @MEAIndia @IndiainSL @SLinIndia @SLDHCinChennai @SLinMumbai
— MFA SriLanka 🇱🇰 (@MFA_SriLanka) January 4, 2021