தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பாதிப்புக் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் பாதி அளவிலேயே திறக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருப்பதால் 100 சதவீத இருக்கைகளுடன் பார்வையாளர்களை அமர தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
நடிகர் விஜய், சிம்பு மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து திரையரங்குகளில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்ததுடன் அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஜனவரி 14ஆம் திகதி தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில் அன்றைய தினம் பல புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளன.
எனினும் பல முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடி யில் வெளியாக தயாராகியுள்ளன.
“100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி முன்னதாக கிடைத்திருந்தால் அந்தப் படங்களும் திரையரங்குகளில் வெளியிட்டு இருக்கலாம்” என சினிமா விமர்சகர்கள் கருதுகிறார்கள்.