ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மகனான மு.க அழகிரி மதுரையில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது திமுகவில் தனக்கு நடந்தவற்றை பட்டியலிட்டுள்ளார் அழகிரி.
திமுகவில் நான் ஒருபோதும் பதவியை விரும்பியதில்லை எனவும் தாெண்டனாகவே பணியாற்ற விரும்பியதாகவும் தெரிவித்துள்ள அழகிரி,
தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை தனக்கு கலைஞர் கருணாநிதி அப்பாேது வலியுறுத்தி கொடுத்ததால் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தன்னிடம் கேட்டுத்தான் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை கருணாநிதி வழங்கியதாக இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ள அழகிரி,கருணாநிதியிடம் தான் எதையும் கேட்கவில்லை எனவும் அமைச்சர் பதவியோ,எம்பி பதவியோ,அவராக கொடுத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஸ்டாலினுக்கு கூட வருங்கால முதல்வரே வருக என போஸ்டர் அடிக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது.
எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக்கி காட்டியது நானே.ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை.தனது தந்தையான கருணாநிதியிடம் தன்னைப் பற்றி பொய்களை கூறி கட்சியை விட்டு நீக்கினார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் எந்த முடிவை அறிவித்தாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.மேலும் உடல்நிலை சரியில்லாத கருணாநிதியை கட்டாயப்படுத்தி திருவாரூரில் போட்டியிட செய்ததாகவும் 2016 தேர்தலில் கருணாநிதி முதல்வரானால் தான் முதல்வராகி விடலாம் என ஸ்டாலின் கருதியதாகவும் மு.க.அழகிரி விமர்சித்துள்ளார்.
கலைஞர்தான் உயிர் மூச்சு எனக் கூறிய அழகிரி, கலைஞரின் அறிவு இந்த உலகத்தில் யாருக்கும் கிடையாது எனவும் அவரைப் போல ஒருவர் மீண்டும் பிறக்க முடியாதெனவும் புகழ்ந்துள்ளார்.