
கடற்படை கப்பலில் இருந்து இயக்கப்படும் 10 ஆளில்லா ட்ராேன் விமானங்களை வாங்குவதற்கு இந்திய மத்திய அரசு ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செலுத்தி வரும் நிலையில் இந்தியா ஆயுதக் கொள்வனவில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
கடற்படையினரால் வாங்கப்படும் ட்ரோன் விமானங்கள் , போர்க் கப்பல்களில் இருந்து பாதுகாப்பு , கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் ,கடலில் மீட்புப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளன.
இதற்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து இரண்டு ட்ரோன்களை இந்திய கடற்படை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.