January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் நாட்டில் ஜனவரி 31 வரை தொடர்ந்தும் ஊரடங்கு

தமிழ்நாட்டில் சிறிய தளர்வுகளுடன் ஜனவரி 31 ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு ஜனவரி 31 ம் திகதி வரை தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.

காணும்பொங்கலன்று கடற்கரைகளில் பொதுமக்களிற்கு அனுமதியில்லை எனவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

நேரக்கட்டுப்பாடுகளை தளர்த்தியும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றியும் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றது எனவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால் நோய்த் தொற்று விகிதம் கடந்த ஒரு மாதமாக 1.7 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,100 நபர்களுக்கு கீழாகவே உள்ளது எனவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்