
சுமார் 25 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணை இந்திய ராணுவத்திலும், விமானப்படையிலும் 2014 முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இது முழுக்கவும் இந்தியாவில் தயாராகும் மூலப்பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஏவுகணை ஆகும்.
வானில் இருக்கும் இலக்கை மிகமிக துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த ஆகாஷ் ஏவுகணை சர்வதேச காட்சி அரங்கில் இந்தியாவின் சார்பாக வைக்கப்பட்டது.
இதைப் பார்த்த இந்தியாவின் நட்பு நாடுகள் ஆகாஷ் ஏவுகணையை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர். இதைத்தொடர்ந்து ஆகாஷ் ஏவுகணையை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அமைச்சரவை ஒத்துக்கொண்டுள்ளது.
இதற்கான ஏற்றுமதி குழு ஒன்று,பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவான ஏற்றுமதிக்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.