June 12, 2025 22:46:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புத்தாண்டுக் கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்த டெல்லியில் இன்று இரவு ஊரடங்கு உத்தரவு

file photo: Facebook/ Delhi Traffic Police

இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், நாளை இரவு 11 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரையும் குறித்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் காரணமாக அதிக அளவில் மக்கள் ஒன்றுக்கூடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேர் இதுவரை இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனவரி 7 ஆம் திகதி வரை பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.